சுவையான பன்னீர் பக்கோடா
தேவையான பொருட்கள்
பன்னீர் - 10 துண்டுகள் (பொடித்துக் கொள்ளவும்),
நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு,
பொடியாக நறுக்கிய 2 பெரிய வெங்காயம்
கேரட் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
ரஸ்க் தூள் - ஒரு கப்,
ரவை - 2 டேபிள்ஸ்பூன்,
சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் ரஸ்க் தூள், சோள மாவு, ரவை, நறுக்கிய வெங்காயம், கேரட் துருவல், கொத்தமல்லி, உப்பு எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து, பொடித்த பன்னீரைப்போட்டு, சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
இந்த மாவிலிருந்து சிறிது எடுத்து, பக்கோடாக்களாக காயும் எண்ணெயில் கிள்ளிப்போட்டு பொரித்தெடுக்கவும்.இப்போது சுவையான பன்னீர்
பக்கோடா தயார்.
No comments