வீட்டிலே இலகுவாக செய்யக்கூடிய முறையில் குல்பி
குல்பி ஐஸ் என்றாலே அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று மலாய் குல்பியை வீட்டிலேயே எளிய முறையில் எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பால் - 1 லிட்டர்
கார்ன் ஃபிளார் - 50 கிராம்
சர்க்கரை - 1 கப்
ரோஸ் எசென்ஸ் - 6 துளி
ஏலக்காய் பொடி - சிறிதளவு
முந்திரி, பாதாம், பிஸ்தா - விருப்பப்படி.
செய்முறை :
முந்திரி, பாதாம், பிஸ்தாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பாலை காய்ச்சி பாதியளவு பாலை எடுத்து அதில் கார்ன் ஃபிளாரை சேர்த்து கட்டியான பதத்தில் நன்கு கரைக்கவும்.
மீதமுள்ள பாலில் சர்க்கரை சேர்த்து கலக்கவும்.
இந்த இரு பால் கரைசலையும் ஒன்றாக கலந்து கடாயில் வைத்து இளம் சூட்டில் கலக்கவும்.
அதனுடன் ரோஸ் எசன்ஸ், ஏலக்காய் தூள், முந்திரி, பாதாம், பிஸ்தா சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
பின்னர் குல்பி மோல்டில் நிரப்பி அல்லது சிறிய டம்ளரில் ஊற்றி 6 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
6 மணி நேரம் கழித்து கெட்டியானதும் எடுத்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.
No comments