நடிகர் கமல்ஹாசன் தனது இரசிகருக்காக செய்த செயல்..
தனது சிறந்த நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்துள்ள கமல் ஹாசன், திரைக்கு வெளியே செய்த நிகழ்வு சமூக வலைதளங்களில் அவருக்கு பாராட்டுகளை குவித்து வருகிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது ரசிகர் ஒருவரை ஜூம் வீடியோவில் தொடர்புக் கொண்ட கமல், அவரிடம் உரையாடி மகிழ்வித்திருக்கிறார்
தனது தீவிர ரசிகர் சகேத்துடன் முழுதாக பத்து நிமிடங்கள் வீடியோ காலில் பேசிய கமல், சோர்ந்து போகாமல் தொடர்ந்தும் புற்றுநோய்க்கு எதிராக போராடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
சகேத் கமல்ஹாசனுடன் பேசுவதற்காக நீண்ட காலமாக ஏங்கியிருக்கிறார். அவரது நெருக்கடியான சூழ்நிலையைப் பற்றி அறிந்துக் கொண்ட கமல், அவரை வீடியோ காலில் சந்திக்க உடனடியாக ஒப்புக்கொண்டுள்ளார். அந்த உரையாடலில் கண்ணீர், சிரிப்பு, புன்னகை என எல்லாமே இருந்தது. தனது மகனுக்கு விருமாண்டி என செல்ல பெயர் வைத்திருக்கும் விஷயத்தையும் சகேத் அப்போது வெளிப்படுத்தினார்.
No comments