தனியார் மற்றும் அரச ஊழியர்களுக்கு இராணுவ தளபதியின் வேண்டுகோள்
கொரோனா அதிகரிப்பின் காரணத்தால் நாட்டில் தற்போது நிலவும் பயணத் தடையின் போது அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான ஊழியர்களை மாத்திரம் கடமைக்கு அழைக்குமாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கேட்டுக்கொண்டுள்ளார்.
தேவையற்ற விதத்தில் அதிகமான ஊழியர்களை பணியில் இணைத்துக் கொள்ள வேண்டாம் என சம்மந்தப்பட்ட தரப்பினரிடம்
மேலும் இராணுவ தளபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பயணத் தடை அமுலில் இருக்கும் நிலையில் அனுமதி இன்றி பல்வேறு கடைகள் திறக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும்
அனுமதி இல்லாமல் திறக்கப்பட்டுள்ள வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
No comments