பொது சுகாதார பிரிவினர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்பட உள்ளதா?

 


வைத்திய சேவையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மட்டும் கொடுப்பனவுகளை அதிகரிப்பதால் ஏற்படும் அநீதியை தவிர்ப்பதற்காக ஏனைய பொது சுகாதார பிரிவினருக்கும் 7,500 ரூபா கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுகாதார சேவைகள் தொழிற்சங்கக் குழு தெரிவித்துள்ளது.

இதன்படி ,நேற்று (14) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அதன் இணை ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.

மேலும் ,இது தொடர்பாக இன்று (15) சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

No comments

Theme images by sandsun. Powered by Blogger.