தர்பூசணியால் இப்படியும் நன்மைகளா!!
தர்பூசணி சாப்பிடுவதன் மூலம் உடலின் வெப்பத்தையும், இரத்த அழுத்தத்தையும் சரி செய்ய முடியும். உடல்நலத்திற்கு ஊட்டச்சத்து வழங்கக்கூடிய பழவகைகளில் தர்பூசணியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இதய நோய்கள் மற்றும் புற்றுநோய் ஆண்டியாக்ஸிடண்ட் லிகோபீனின் போன்ற நோய்களுக்கு சிறந்த மருந்து தர்பூசணி.
தர்பூசணியில் வைட்டமின் ஏ வைட்டமின் சி சத்துகள் நிறைந்து காணப்படுகிறது. உடலிற்கு தேவையான இன்சூலினையும் தர்பூசணி மேம்படுத்துகிறது.
தர்பூசணியில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா பிரச்சனை வராது.
தர்பூசணியில் கொலஸ்ட்ரால் குறைவாக இருப்பதால், இது இதயத்திற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
கட்டி, நீரிழிவு, பெருங்குடல் புற்றுநோய் மற்றும் வாதம் போன்றவற்றை தர்பூசணி மூலம் குணப்படுத்தலாம்.
தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் மற்றும் கொலஸ்ட்ரால் குறைவாகவும் இருப்பதால், டயட்டில் இருப்பவர்கள் இதனை அதிகம் சேர்த்துக் கொண்டால் எடையில் நல்ல பலனை தரும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது. காயங்களை விரைவாக குணப்படுத்தும் ஆற்றலும் இதற்கு உண்டு.
குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தர்பூசணி சாப்பிடுவதன் மூலம் பொட்டாசியத்தை அதிகரித்து கொள்ள முடியும்.
தர்பூசணியில் சிறுநீரகத்தில் படிந்துள்ள உப்பை வெளியேற்றி சுத்தப்படுத்தும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. மேலும் இது யூரிக் ஆசிட்டின் அளவைக் குறைக்கும்.
சருமத்தில் அதிகப்படியான வறட்சி இருந்தால், அதனை போக்குவதற்கு தர்பூசணியை தேனில் நனைத்து, சிறிது நேரம் மசாஜ் செய்தால், முகத்தில் உள்ள வறட்சி நீங்கும்.
தர்பூசணியை அளவாக உட்கொண்டு வந்தால், அது இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரையின் அளவைக் குறைக்கும்.
தர்பூசணியில் உள்ள லைக்கோபீன் எலும்பைப் பாதுகாக்கும். எலும்பு நோயான ஆஸ்டியோபோரோசிஸைத் தடுக்கும்.
No comments