வேப்பிலையில் அழகு ! ஆரோக்கியம் !
# இது பல சரும நோய்கள் மற்றும் கூந்தல் . . . .
.பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைத் தருகிறது.
# கொதிக்கும் நீரில் வேப்பிலையை போட்டு, சிறிது நேரம் கொதிக்க வைத்து, பின் ஆவி பிடிக்க வியர்வை சுரப்பிகளில் உள்ள கிருமிகள் நீக்கும்.
# கொழுந்து வேப்பிலையை அரைத்து, பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி, 15 - 20 நிமிடம் ஊற வைத்து, பின்னர் குளிர்ந்த நீரில் கழுவினால், சருமம் நன்கு பொலிவோடு காணப்படும்.முகப்பரு நீக்கும் கிருமிநாசினி வேப்பிலை.
# வேப்பிலையை கொதிக்கும் தண்ணீரில் போட்டு, தண்ணீரின் நிறம் மாறும் வரை ஊற வைத்து,அந்த நீரை தலைக்கு ஊற்றினால், தலையில் இருக்கும் பொடுகு மற்றும் அதிகமான கூந்தல் உதிர்தல் சரியாகிவிடும். தலை அரிப்பிற்கு இது அருமருந்தாகும்.
# வேப்பிலையை நன்கு பேஸ்ட் போல் அரைத்து, , தலைக்கு தடவி, ஷாம்பு போட்டு குளித்தால், பொடுகு நீங்கி, கூந்தல் பட்டுப் போன்று மின்னும்.
# பேன் தொல்லையில் அவதிப்படும் குழந்தைகளுக்கு வாரம் ஒருமுறை வேப்பிலைகுளியல் போடலாம்
No comments