கோவிந்தா என்றால் இப்படியும் நன்மையா!!
கோவிந்தா என்ற சொல் எதை குறிக்கும் என்று தெரியுமா!!
மகாவிஷ்ணு தலங்களுக்கு சென்றால் கோவிந்தா என்ற குரல் ஆங்காங்கே எதிரொலிப்பதை கேட்கலாம்.
கோவிந்தா என்ற சொல்லுக்கு "பசுக்களின் தலைவன், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவன், பூமியை தாங்குபவன்'' என்று பொருளாகும்.
எனவே தான், பக்தர்கள் "கோவிந்தா, கோவிந்தா" என்கிறார்கள். வழிபாடு செய்யும் போது, “கோவிந்தா” என்று வழிபட்டால், கூடுதல் பலன்களைப் பெறலாம்.
"கோவிந்தா" என்று சொன்னால் ”போனது வராது" என்று பொருள்படும். அதாவது, "கோவிந்தா" என இறைவனை அழைத்தால், பல ஜென்ம கடன் தீர்ந்து, தீவினை நம்மை பின் தொடராது என்பது ஐதீகம். இதனால் தான் கடன் வாங்கியவன், திருப்பித்தராமல் ஏமாற்றி விட்டால், "பணம் கோவிந்தா தானா?" என கேட்கும் வழக்கம் வந்தது. அற்புதமான இறை நாமத்திற்கு, அபசகுணம் என தவறான பொருள்படும்படி பலர் திரித்துவிட்டனர்.
"கோவிந்தா" எனும் சொல்லுக்கு வேறொரு பொருளும் உண்டு.
இதை ‘கோ இந்தா' என்றும் பிரிக்கலாம். அப்போது ‘கோ' என்றால் பசு, 'இந்தா' என்றால் ‘வாங்கிக்கொள்' என்று பொருள் வரும். கோவிந்தா... கோவிந்தா... என சொல்லச்சொல்ல பசுதானம் செய்த புண்ணியம் கிடைத்துக் கொண்டே இருக்குமாம்.
எப்போதும் கோவிந்த நாமம் சொல்லிக்கொண்டே இருங்கள்.
பசுக்களுடன் விளையாடி மகிழ்ந்த கிருஷ்ணனின் அருள் பூரணமாகக் கிடைக்கும்.
அதிலும் புரட்டாசி மாதம், பெருமாளுக்கு உகந்தது. இந்த மாததத்தில், கோவிந்த நாமம் சொல்வது பெரும் பலனை தரும்.
இந்த நாமத்தை கூறுவதற்கு, நேரம் காலம் அவசியமில்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லலாம். மகத்தான பலன்களை பெறலாம்...
No comments