10 மிளகு இருந்தால் பகையாளி வீட்டில் உண்ணலாம் என்பது பழமொழி

1.மிளகில் உள்ள வேதிப் பொருட்கள் அனைத்தும் நம்மை நோயிலிருந்து காக்கும் வேலையைச் செய்கிறது மேலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

 2.மிளகு நாம் அன்றாட வாழ்வில் சேர்த்துக் கொள்ளக் கூடிய ஓர் மருத்துவம் நிறைந்த பொருளாகும் இதை அண்டிபயோட்டிக் என்றும் சொல்லலாம்.

 3.மிளகில் மாங்கனீஸ், இரும்பு பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் நார்ச் சத்து என்பன அடங்கி உள்ளது

 4.கறுப்பு மிளகு ஒவ்வாமையை (அலர்ஜி) தடுப்பதிலும், நோய் எதிப்பு சக்தியைக் கொடுப்பதிலும் சிறந்து விளங்குகின்றது.

 5.வலி மற்றும் காது சம்மந்தமான பிரச்சனைகள் பூச்சிக் கடி, குடல் இறக்கம், கக்குவான் இருமல் ஆஸ்த்துமா போன்றவற்றிற்கு மிளகு இன்றி அமையாத ஒன்று.

 6.நரம்புத்தளர்ச்சி, கை கால் நடுக்கம், உதறல், ஞாபக சக்தி குறைபாடு, முதுமையில் உண்டாகும் மாறாட்டம், இவற்றிற்கு  மிளகு சிறந்த மருந்தாகும்.

 7.இருமல், மலச்சிக்கல், ஜலதோசம், செரிமானப்பிரச்சனை, இரத்தசோகை, ஆண்மைக்குறைவு, தசை சம்மந்தமான பிரச்சனைகளுக்கும், பல் பாதுகாப்பு, பல் சம்பந்தமான நோய்கள் வயிற்றுபோக்கு இதய நோய் போன்றவற்றை குணப்படுத்துவதிலும் மிளகு சிறப்பிடம் வகிக்கின்றது.

 8.மிளகு அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வதால் உணவும் நன்கு செரிக்க ஆரம்பிக்கிறது.

 9.காய்ச்சலுடன் வயிற்று பொருமலையும் தணிக்கும்.

 10. உமிழ்நீரை அதிகம் சுரக்க வைக்கிறது. ஜீரணக் கோளறு உடனே குணமாகிறது

 11.ஜீரண உறுப்புகள் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டுத் தொந்தரவில்லாமல் செயல்பட உதவுகிறது.

 12.மிளகுடன் பனை வெல்லம் கலந்து காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் தலைப்பாரம்,தலைவலி, மண்டைப் பீனிசம் போன்றவை குணமாகும்.

 13குறிஞ்சா இலைச் சூறணத்துடன் மிளகுத் தூளைச் சேர்த்து தேனில் கலந்து காலையும் மாலையும் தொடர்ந்து ஆறு மாதம் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு முற்றிலும் குணமாகும்.

 14.மிளகை சுட்டு அந்தப் புகையை நுகர்ந்தால் தலைவலி 

குணமாகும் அது மட்டும் இன்றி மிளகை இடித்து தலையில் பற்றுப் போட்டாலும் தலைவலி விரைவில் குணமாகும்.

 15.மிளகில் காணப்படும் கறுப்பு நிறமான தோல் கொழுப்பினால் உண்டாகும் உயிரணுக்களை தடுப்பதற்கு உதவுகின்றது இதன் காரணத்தால் மிளகு கலந்த உணவை சாப்பிடுவதன் மூலம் தேவையற்ற எடையையும் குறைக்கலாம்.

 16.மிளகு சேர்க்கப்பட்ட உணவு உடலில் உள்ள வியர்வைகளை வெளியேற்றுவதுடன் எளிதில் சிறுநீரை கழிக்கவும் உதவுகிறது.

 17.மிளகு பால் அருந்தினால் கோழை அகற்றும் ஆஸ்துமாவுக்கு மிக நல்லது 

 18.இது சுவாசப் பிரச்சனைகளுக்கும் மிகவும் நல்லது.

 (சூடு உடம்ப காரர் களுக்கு மிளகு ஆகாது)

No comments

Theme images by sandsun. Powered by Blogger.