மொத்த விற்பனை நோக்கத்திற்காக பொருளாதார மத்திய நிலையங்கள் திறப்பு...

நாட்டின் பொருளாதார மத்திய நிலையங்கள் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய திறக்கப்பட்டுள்ளன.
தம்புள்ளை, தம்புத்தேகம, நுவரெலியா, கெப்பட்டிப்பொல, நாரஹேன்பிட்டி, மீகொட, பிலியந்தலை, இரத்மலானை, வேயங்கொடை, வெலிசறை மற்றும் நாவலப்பிட்டி போன்ற பொருளாதார மத்திய நிலையங்கள் இதன் அடிப்படையில் திறக்கப்பட்டுள்ளன. 

பொருளாதார மத்திய நிலையங்களில் கொள்வனவு செய்யும் நடமாடும் விற்பனையாளர்கள் தங்களின் அனுமதிப்பத்திரத்தை காண்பித்து கொள்வனவு நடவடிக்கையில் ஈடுபட முடியும். 

No comments

Theme images by sandsun. Powered by Blogger.