Basic hair care -என்ன பண்ணலாம்?

இன்றைக்கு market ல்-hair care products எவ்வளவோ வந்தாச்சு.

அதுவும் ஒவ்வொரு hair type க்கும் வேறுவேறு விதமான hair oils, hair serums,shampoo's,
conditioners என இருந்தாலும்...

# நாம வாங்கற cosmetics நமக்கு set ஆகுமான்னு தெரிஞ்சு வாங்கறது எத்தனை பேர்?

# விளம்பரம் பார்த்து,இந்த brand shampoo உபயோகித்தால் அடர்த்தியான கூந்தல் வளரும்னு சொல்றத நம்பி, வாங்கறது எத்தனை பேர்?

இவ்வாறு சொல்வதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்று நமக்கு தெரிந்தால் கூட, இன்றைய அவசர வாழ்க்கை முறை - நம்மை யோசிக்க நேரமில்லாமல் செய்கிறது.

எண்ணெய் ,சீயக்காய் , வடிகஞ்சி வழக்கத்தில் இருந்தவரைக்கும் ,இருந்த பிரச்சினைகளை விட ,
இன்று இவ்வளவு hair care products ,வந்த பிறகும் அதிகரித்திருப்பது ஏன்?

சரி அதற்காக மறுபடியும் எண்ணெய் ,சீயக்காய் க்கு மாற நம்மால் முடியுமா? என்றால் மாறினாலும் தவறு இல்லை என்றே சொல்லலாம்.

சீயக்காய் என்ற பெயரில் powder ஷாம்பூகள் நிறைய market ல் கிடைத்தாலும் அவை சீயக்காய் தானா?

வேறு என்ன மாதிரியான hair care எடுத்துக்கலாம்?

# தலையில் எண்ணெய் இல்லாமல் shampoo use பண்ணவேண்டாம்.

# எண்ணெய் தடவி 1மணிநேரம் முதல் 3 அல்லது 6 மணி நேரம் வரை ஊறவிடலாம்.
இரவு தடவி காலையில் குளிக்கலாம்.
அதுவும் முடியாத போது 10 நிமிடங்கள் மட்டுமாவது ஊறவிடுங்கள்

# உங்களுடைய shampoo வை அப்படியே தலையில் direct application செய்யவே கூடாது.

# தேவைக்கு அதிகமான shampoo உபயோகிக்காதீர்கள்.

# அளவான shampoo வுடன் 1/2 glass தண்ணீர் அல்லது பால் கலந்து ..இந்த கலவையை , தலையை ஈரப்படுத்தியபின் massage செய்யலாம்.

# தலையில் shampoo கலவை எவ்வளவு நேரம் இருக்கலாம்? என்றால் ஒன்றரை முதல் அதிக பட்சமாக இரண்டு நிமிடங்கள் போதுமானது.

# தலையை கழுவும் போதும், தலை அலசிய நீர் தெளிவாக வரும்வரை நன்கு அலசவும்.

# குளித்து முடித்த பின் , towel கொண்டு நன்கு  அழுந்த துடைத்து, scalp ஐ ஈரப்பதம் இன்றி துடைப்பது (towel dry) மிக அவசியம்.

# ஈரத்தலையில் கொண்டை முடித்து , ஈரத்துடன் தலை பின்னுவது fungal infectionக்கு வழி வகுக்கும்.

வாரம் இரண்டு முறை மட்டும் இப்படி குளிப்பதன்மூலம் பொடுகு, வேர்வை வாடை, fungal infection இன்றி இருக்கலாம் .
 

No comments

Theme images by sandsun. Powered by Blogger.