Summer வந்தாச்சு.கூடவே இந்த lockdown வேற. parlor போக முடியாது. நமக்கு நாமேதான்.
வீட்டில் ஆப்பிள், இருந்தால் ,நன்கு கழுவி விதையில்லாமல் நறுக்கி, பின் mixie யில் நன்கு paste மாதிரி அரைத்து கூழாக்கி அதை சிறு சிறு துண்டுகளாக வரும்படி ice tray யில் ஊற்றி உறைய விடவும் (freeze) நன்கு இறுகி பனிகட்டியான பழக்கூழ், கூடவே அரிசி மாவு என இந்த இரு பொருட்கள் தான் நமக்கு தேவையானவை. எப்போதுமே உறைந்த பனிக்கட்டி சருமத்தின் மீது நேரடியாக வைக்க உகந்தது அல்ல. எனவேசுத்தமான மெல்லிய துணி, அல்லது cloth tissue எதாவது ஒன்றில் இந்த பழக்கலவை பனிக்கட்டியை சுற்றி முகத்தில் மிக மெதுவாக massage பண்ணவும். மிக முக்கியமாக ,கைகளை முகம் முழுவதும் பரவலாக படும்படி massage இருப்பது அவசியம். சளி போன்ற வேறு பிரச்சனைகள் வரக்கூடும் என்பதால் கவனம் அவசியம். நினைவில் இருக்கட்டும் ... இது ஒரு சுலபமான வழி. ஆர்வகோளாரில் அளவுக்கு அதிகமாகவோ , அல்லது ஒரே நாளில் இருமுறையோ செய்ய தேவை இல்லை. பழக்கலவை முகத்தில் சீராக பரவியதும் ....அரிசி மாவு (dry powder) விரல்களில் படும்படி தொட்டு முகத்தில் மிக மென்மையாக massage பண்ணுங்கள். pack காயும்வரை சுமார 15-20 நிமிடங்களில் normal water-ல் கழுவி மெல்லிய towel-ல் முகத்தை ஒற்றிஎடுக்கவும் வாரம் இரு முறை இவ்வாறு பழக்கலவை ice கூல் facial பண்ணலாம். # மூக்கின் மேல் மற்றும் பக்கவாட்டில் black head,white head நீக்கும் # கண்களின் கருவளையம் நீங்க கண்களை சுற்றி இடது வலதாக ( clockwise ,anticlockwise) மற்றும் கண்களின் பக்கவாட்டிலும் (wrinkles,crow's feet) சுருக்கங்களை குறைக்கும். # இறந்த செல்களை (dead cells) நீக்கும். # வெயிலினால் ஏற்படும் நிறமாறுபாட்டை(suntan) சரி செய்கிறது. # தளர்ந்த சருமத்தை சரிசெய்கிறது.(skin tightening) இன்னும் சொல்லிட்டே போகலாம். சரி ஏன் பழக்கூழை உறையவைக்க வேண்டும். அப்படியே உபயோகிக்கலாமா? என்றால் கண்டிப்பாக அப்படியும் செய்யலாம். sinus problem உள்ளவர்கள் அப்படி செய்யலாம். மற்றபடி அனைவருக்குமே உறைந்த பழக்கலவையின் பயன் மிக அதிகம். # சருமத்தில் உள்ள சிறுசிறு துளைகளை (open pores) நெருக்கமாக்கி நாளடைவில் மறைய செய்யும். # மிருதுவான பளபளப்பான சருமம் பெறலாம். # சோர்ந்த கண்கள் புத்துணர்ச்சி பெறும்.(puffy eyes) #முகத்தில் இரத்த ஓட்டம் அதிகரிப்பதால் முகம் fresh ஆக மாறுவதை உணர முடியும். # (acne ,pimples) பருவினால் பிரச்னை உள்ளவர்களும் தாரளமாக இதை செய்யலாம். # சருமத்தில் ஈரப்பதம் குறையாமல் இருக்கும். # சுருக்கத்தால் ஏற்படும் தளர்ந்த சருமம் மாறும். (anti ageing) party, function கிளம்பும்போது makeup க்கு முன்னாடி 2-3 நிமிடங்கள் இந்த pack போட்டால்,இதே icepack -- primer ஆகவும் makeup கலையாமல் freshஆக வைக்க மிக அருமையாக உதவுகிறது. ஆப்பிள் மட்டுமே தானா? வேறு என்ன என்ன உபயோகிக்கலாம்? என்றால் # உருளைக்கிழங்கு, # பெங்களூர் தக்காளி # பப்பாளி # நொங்கு # சாத்துக்குடி # வெள்ளரிக்காய் # சோற்று கற்றாழை ... என நிறைய இருக்கிறது.அடுத்தடுத்த post -ல் அது பற்றி பார்க்கலாம். |
No comments