சாஸ்திர விதிகளில் உள்ள சில ஆன்மீக தகவல்கள்

மகாலட்சுமி அமர்ந்த நிலையில் உள்ளபடம், விக்கிரகம் ஆகியவற்றையே வீட்டில் வைக்க வேண்டும்.

வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே குளிர்ந்து விடுவதுதான் நல்லது. நாம் அணைக்கக் கூடாது.

திருக்கோவிலின் பிரதான வாசல் வழியேதான் கோயிலுக்குள் செல்ல வேண்டும்.

அர்ச்சனைப் பொருட்களை இடது கையால்எடுத்துச் செல்லக் கூடாது

கோவிலிலிருந்து வீட்டிற்கு வந்ததும் சிறிது நேரம் கழித்துக் கை,கால்கள் கழுவலாம். ஆனால் குளிக்கக் கூடாது.

எலுமிச்சம் பழத் தீபம் விளக்கைக் கோயிலில் மட்டுமே ஏற்ற வேண்டும். வீடுகளில் ஏற்றக் கூடாது.

சுவாமிக்கு எடுக்கும் ஆரத்தியில் சுண்ணாம்பு சேர்க்கக் கூடாது. 
மனிதர்களுக்கு எடுக்கும் போது சுண்ணாம்பு சேர்க்கலாம்.

சனி பகவானுக்கு வீட்டில் எள் விளக்கு ஏற்றக் கூடாது

இறைவன் சன்னிதி போன்ற தெய்வீக அலை உள்ள இடத்தில் யோசித்தால் நல்ல முடிவு கிடைக்கும்.

நல்ல காரியங்கள் பற்றிப் பேசும் போது, எள் அல்லது எண்ணெய் பற்றிப் பேசக் கூடாது. பேசினால் சுபம் தடைபடும்.

ருத்ராட்சம் மாலையை அணிவோர் இறுதிச் சடங்குகளுக்குச்செல்லும் பொழுது அதைக் கழற்றி வைத்து விட்டு செல்ல வேண்டும்...

கோயில் மூடியிருக்கும் போதும், திருமஞ்சன பூஜையின் போதும், திரையிட்டிருக்கும் போதும் வழிபடக்கூடாது.

குங்குமத்தை வலது கை மோதிர விரலில் இட்டுக் கொள்வதே நல்லது

விக்கிரகத்திற்கு தீபாராதனை நடக்கும்போது கண்களை மூடிக்கொண்டு வணங்கக்கூடாது.

செவ்வாய் கிழமை, புதன் கிழமை பகல்,வெள்ளிக்கிழமை குத்து விளக்கைத் துலக்கக் கூடாது.

இறந்த முன்னோர்களின் படங்களை (அவர்கள் தெய்வமாகி விட்டிருந்தாலும்) சாமி படங்களுடன் வைத்து வணங்குதல்கூடாது. தனியாக வீட்டில் வேறொரு இடத்தில் வைத்து வணங்கலாம். 

வாழைப்பழம் சாப்பிட்டபின் மோர் சாப்பிடக் கூடாது...

பூஜை அறையில் தெய்வங்களை வடக்குப் பார்த்து வைக்கக் கூடாது..!

புல்லாங்குழல் ஊதும் தனி கிருஷ்ணன் படம், விக்கிரகம், காலண்டர் ஆகியவற்றை வீட்டில் வைக்கக் கூடாது. பசுக்களோடு உள்ள மற்றும் ராதையுடன் கூடிய புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைத்துக்கொள்ளலாம்.

கர்ப்பிணிப் பெண்களோ அல்லது அவர்கணவரோ சிதறு தேங்காய் உடைக்கக்கூடாது. 

சிங்கம்,புலி,கரடி ஆகிய கொடிய மிருகங்களின் பொம்மைகளை உங்களுடைய வீடுகளில் வைப்பதின் மூலம் எதிரிகளின் தொல்லை அடங்கும்.

தன்னைப்பற்றி பிறரிடம் சொல்வதன் மூலம் குறைந்து விடும் விஷயங்கள் இரண்டு. அவை பாவமும் புண்ணியமும்.
நாம் செய்யும் பாவங்களை நாமே பிறரிடம் கூறும் போது அதுவும் குறைந்து கொண்டே வரும்.

முறைப்படி மந்திரங்கள் ஓதி பிறர் மீது ஏவப்பட்ட செய்வினைக்கு 1008 நாட்கள் மட்டுமே சக்தி உண்டு.அதன் பிறகு அது செய்தவனையே திருப்பித்தாக்கும்.தான் செய்த வினையை தாமே அனுபவிப்பார்.

உங்கள் வீட்டில் துர்நாற்றம் வீசிக் கொண்டிருந்தால் கண்ணூறு தாக்கி இருப்பதாக உறுதி செய்து,உங்கள் வீடு முழுக்க உப்பு கலந்த நீரால் கழுவி விட்டால் கண்ணூரு போய்விடும்.

அடுக்கு அரளி,செம்பருத்தி பூக்களைக் கொண்டு பூஜை செய்வதினால் ஞானம் பெருகும்.தொழில் விருத்தியடையும்.

ஒரு பெண் கர்ப்பமான ஏழாவது மாதத்திலிருந்து அவள் குழந்தை பெற்ற முப்பதாவது நாள் வரை அவளது ஜாதகத்தைப் பார்த்து பலன் சொல்லுதல் கூடாது.

அன்னாச்சிப்பழம் ஓவியத்தை உங்கள் வீட்டில் சுவற்றிலோ அல்லது தொழிலகங்களின் முன்புற அறைகளிலோ வரைந்து வைத்தால் அதிர்ஷ்டம் தேடிவரும்.

இவைகள் அனைத்தும் சாஸ்திரங்களில் உள்ளதாக சொல்லப்படுகிறது ...

 

No comments

Theme images by sandsun. Powered by Blogger.