செட்டிநாட்டு பூண்டு - சின்ன வெங்காய குழம்பு

தேவையான பொருட்கள்

சின்ன வெங்காயம்-   1/4 கிலோ
தக்காளி-   2
பூண்டு-   1 கப்
புளி-   எலுமிச்சம் பழ அளவு
மிளகாய்த்தூள்-   1 டீஸ்பூன்
தனி மிளகாய்த்தூள்-   1 டீஸ்பூன்
மஞ்சள் தூள்-   1/2 டீஸ்பூன்
கருவேப்பிலை-   தேவையான அளவு
எண்ணெய்-   3 டேபிள் ஸ்பூன்
கடுகு-   1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள்-   1/2 டீஸ்பூன்
வெந்தயத்தூள்-   1/2 டீஸ்பூன்
உப்பு-   தேவையான அளவு

செய்முறை

முதலில் சின்ன வெங்காயத்தை தோல் உரித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் பூண்டையும் தோலுரித்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். 2 தக்காளியை மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்க்கவும். கடுகு பொரிந்ததும் கருவேப்பிலை சேர்த்து தாளித்து இதில் நாம் தோல் உரித்து வைத்துள்ள பூண்டையும், சின்ன வெங்காயத்தையும் சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளுங்கள். பின்னர் இதனுடன் நாம் அரைத்து வைத்துள்ள தக்காளியும் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள். பின்னர் சிறிது மஞ்சள் தூள், 2 ஸ்பூன் மிளகாய்த்தூள், 1 ஸ்பூன் தனி மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து சிறிது நேரம் நன்கு கொதிக்க வையுங்கள். பின்னர் புளியை கரைத்து இதனுடன் சேர்த்து நான்கு கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள் நன்கு கெட்டியானதும் இறக்கி வைத்துக் கொள்ளுங்கள். செட்டிநாடு பூண்டு - சின்ன வெங்காய குழம்பு தயாராகிவிட்டது.

 

No comments

Theme images by sandsun. Powered by Blogger.