இந்துக்களின் திருமண சடங்குகளின் பலன்கள்......
அரிசி தூவி வாழ்த்துவது - உணவிற்கு பஞ்சமின்றி வாழ்வீர்கள் என்பதற்காக...
மூன்று முடிச்சு - அறம், பொருள், இன்பம் என்ற மூன்று உறுதிப் பொருளில் நிற்பதற்காக...
வாழை மற்றும் தென்னங்கீற்று தோரணம் - வாழை தென்னை அழியாத பயிர்கள். இவை எல்லா காலங்களிலும் வளரும். அதன் எல்லா பாகங்களும் நமக்கு பயன்தரும். அதுபோல் மணமக்கள் வாழ வேண்டும் என்பதற்காக...
மெட்டி அணிவிப்பது - வாழ்வின் பொறுப்புகளை சுட்டிக்காட்டும் கால்கட்டின் அடையாளம்...
கெட்டி மேளம் கொட்டுவது - அனைவரையும் திருமணம் பற்றி மட்டுமே சிந்திக்க வைக்க. அமங்கலமான அபசகுணமான வார்த்தைகளை கேளாதிருக்க...
மாலை மாற்றுதல் - உள்ளத்தால் ஒன்றுபட மனம் மாற்றம் தேவை. அதை உணர்த்த மாலை...
பத்து பொருத்தங்களைப் பார்த்து
ஒன்பது கோள் நிலைகளை அறிந்து
எட்டு திசையிலிருந்தும் உறவை அழைத்து
ஏழு அடி எடுத்து வைத்து
அறுசுவை உணவு படைத்து
பஞ்ச பூதங்கள் சாட்சியாக
நான்கு வேதங்கள் முழங்க
மூன்று முடுச்சுகளால்
இரு மனங்கள் ஒன்று சேரும்
No comments