ஆரோக்கியமான அழகான நகங்கள் வேண்டுமா??? இதோ உங்களுக்காக சில குறிப்புகள்

 வெது வெதுப்பான தண்ணீரில் சிறிதளவு எலுமிச்சை சாறும், ஷாம்பூ சிறிதளவும் கலந்து அதில் கைகளை பத்து நிமிடம் ஊற வைத்து , பின் சுத்தமான பிரஷ்

வைத்து நகத்தை சுத்தம் செய்தால் நகம் பளிச்சென்று இருக்கும். இதை

வாரத்திற்கு ஒருமுறை செய்தால் போதுமானது 

 குளித்தவுடன் நகம் வெட்டினால், நகம் 

ஈரத் தன்மையுடன் இருப்பதால், எளிதாக வெட்ட வரும். ஈரமாக இருக்கும் போது ஷேப் செய்தால்,


நகங்கள் உடைவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே,

நகங்கள் ஈரமாக இருக்கும்போது ஷேப் செய்வதை  தவிருங்கள்.

 தினமும் நெயில் பாலீஷ் உபயோகிப்பதால் நகங்களின் நிறம் மங்கி காணப்படும். எனவே வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் நெயில் பாலீஷ் உபயோகிக்காமல், இருப்பது . நல்லது. தரமான நெயில் பாலிஷ்களை மட்டுமே உபயோகிக்க வேண்டும்.

 
நகங்கள் உறுதியற்று உடைவதற்கு இரும்பு மற்றும் கால்சியம் போன்ற சத்துக்குறைபாடுகளே காரணம். எனவே ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள்

மற்றும் உணவு வகைகளை சாப்பிடலாம்

No comments

Theme images by sandsun. Powered by Blogger.