வறண்ட சருமம் உள்ளவரா நீங்கள்.. இதோ உங்களுக்காக சில குறிப்புகள்

 

பொதுவாக இரண்டு வகையான சருமம் உள்ளது. ஒன்று எண்ணெய் சருமம் மற்றொன்று வறட்சியான சருமம். எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்குள்ள பிரச்சனை, முகம் எப்போதும் எண்ணெய் வழிந்தவாறு முகப்பரு, பிம்பிள் பிரச்சனையுடன் இருக்கும்.



வறட்சியான சருமம் உள்ளவர்களுக்கு, சரும அரிப்பு, எரிச்சல்,  சொரசொரப்பான சருமம் என்று இருக்கும். அதுமட்டுமின்றி, இந்த வகை சருமத்தினருக்கு பொடுகுத் தொல்லை, சுவாசக் கோளாறு, வயிற்றுப் பிரச்சனைகள் போன்றவை இருக்கும்.

அதிலும் வறட்சியான சருமம் உள்ளவர்களுக்கு,  மூக்கைச் சுற்றி, வாயைச் சுற்றி வறட்சி ஏற்பட்டு, தோல் உரிய ஆரம்பிக்கும்.


சருமத்தின் வெளிப்புறத்தில் அழகு சாதனப் பொருட்களைக் கொண்டு பராமரித்தால் மட்டும் போதாது. உட்புற பராமரிப்பும் தேவை. அதற்கு தினமும் குடிக்கும் தண்ணீரின் அளவை அதிகரிக்க வேண்டும்.

பாதாம் எண்ணெயை கற்றாழை ஜெல்லுடன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், வறட்சி நீங்கும். தோல் உரிவதும் தடைப்படும். 

ஸ்கரப் தூசிகளும், அழுக்குகளும் முகத்தை பொலிவிழந்து வெளிக்காட்டும். இப்படி பொலிவிழந்து காணப்படும் சருமத்தை  ஸ்கரப் செய்யாவிட்டால், இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் வளைவுகள் உள்ள இடங்களில் தங்கி, நிலைமையை மோசடையச் செய்யும்.

எனவே எலுமிச்சை சாறு மற்றும் சர்க்கரையை ஒன்றாக கலந்து, முகத்தில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து கழுவ வேண்டும். மேலும் இந்த செயலை வாரம் 2 முறை செய்து வர வேண்டும்.

மாஸ்க் போடவும் மூக்கைச் சுற்றி வரும் வறட்சியைத் தவிர்க்க, பால், தயிர் மற்றும் வெள்ளரிக்காய் கொண்டு மாஸ்க் தயாரித்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் ஈரப்பசை தக்க வைக்கப்படும்.

முட்டையின் மஞ்சள் கருவுடன், சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு கலந்து, அதனை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இதன் மூலமும் சரும  வறட்சியைத் தடுக்கலாம்.

No comments

Theme images by sandsun. Powered by Blogger.