மொறு மொறுப்பான சுவையான வாழைப்பூ பக்கோடா
தேவையான பொருட்கள்.
1 வாழைப்பூவை நரம்பை எடுத்து விட்டு தண்ணீரில் போடவும்.
கடலை மாவு 1/2 கப்
அரிசிமாவு 2 டேபிள் ஸ்பூன்,
ஒரு டீ ஸ்பூன் மிளகாய் தூள்,
ஒரு டீஸ்பூன் பெருங்காயத்தூள்,
தேவையான அளவு உப்பு
பொடியாக நறுக்கிய 2 பெரிய வெங்காயம்
பொடியாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய்
பொடிப் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை.
முதலில் தண்ணீரில் ஊற வைத்த வாழைப்பூவை நீர் இல்லாமல் நன்கு வடித்து எடுக்கவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் வடித்து எடுத்த வாழைப்பூ வுடன் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து மிக்ஸ் பண்ணவும். தண்ணீர் தேவை என்றால் மாத்திரம் லேசாக தண்ணீர் தெளித்து கிளறவும்.
பிறகு எண்ணெய் காய்ந்தவுடன் மிதமான சூட்டில் வாழைப்பூ கலவையை உதிரி உதிரியாக போடவும்.
மிகவும் சுலபமான முறையில் சுவையான பகோடா ரெடி.
No comments