தெலுங்கில் ரீமேக் ஆகும் படத்தில் நயன்தாரா.


தெலுங்கில் ரீமேக் ஆகும் லூசிபர் திரைப்படத்தில் நடிகை நயன்தாரா முதல்வர் மகளாக நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.


இதன்படி ,மலையாளத்தில் மோகன் லால் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் ‘லூசிபர்’. இந்தியாவையே மிரள‌ வைத்த இந்த படத்தில் மோகன்லால் அரசியல்வாதியாகவும், அண்டர்கிரவுண்ட் கேங்ஸ்டராகவும் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்கும் பணிகளை பிருத்விராஜ் ஆரம்பித்துள்ளார்.

தற்போது லூசிபர் படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. சுமார் 200 கோடி ரூபா பட்ஜெட்டில் இப்படம் தயாராக உள்ளது. தற்போது இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் ,இந்நிலையில், இப்படத்தில் நடிகை நயன்தாராவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடித்திருந்த முதலமைச்சர் மகள் கதாபாத்திரத்திற்கு, நயன்தாராவை தேர்வு செய்துள்ளனர். இந்த கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை நயன்தாராவிடம், கடந்த சில மாதங்களாக பேச்சுவார்த்தை நடந்து வந்தது. தற்போது தான் அவர் சம்மதம் தெரிவித்துள்ளார்.

No comments

Theme images by sandsun. Powered by Blogger.