பளபளப்பான மிருதுவான கூந்தலுக்கு

கெமிக்கல் அதிகமான shampoo களினால் ஏற்படும் கூந்தல் பிரச்சனைகளை சரி செய்ய

கூந்தலைச் சுத்தப்படுத்த, தலைமுடி அடர்த்தியாக வளர  செம்பருத்தி பூ உதவுகிறது

முடி சுத்தமாவதுடன் பட்டுப்போல மென்மையாகும்.பளபளப்பான கூந்தலுக்கு விதவிதமான conditionerகளை use பண்ணுகிறோம்.conditioner செய்யக்கூடிய வேலையை இப்பூ மிக சுலபமாக செய்கிறது.

முடி வறண்டு உடைந்து உதிர்வது அதிகமானால் , மற்றும் பொலிவில்லாதdull hair இருந்தால்செம்பருத்தி இலை மற்றும் பூக்களை அரைத்து எண்ணெய் இல்லாத முடியில் இந்த pack சுமார் 30 நிமிடங்கள் ஊற விட்டுதண்ணீர்விட்டு shampoo போடாமல் நன்கு தேய்த்து அலச வேண்டும்.வாரம் ஒருமுறை தொடர்ந்து செய்ய அற்புதமான பலன்களை காணலாம்.

இப்பூவின் மருத்துவ குணங்கள் ஏராளம்.

சித்தர்கள் நூலில் செம்பருத்திப்பூவில் தங்க சத்து இருப்பதாக கூறப்படுகிறது.மருந்தாக உட்கொள்ளும் போது தலைவலி, பொடுகு, நீர்க்கடுப்பு,உடல் உஷ்ணம்( body heat) ,இருதய துடிப்பு சீர் படுத்துவது போன்ற இன்னும் ஏராளமான நோய்களை நீக்கும், மற்றும் உடல் உறுப்புகளை பாதுகாக்கும் தன்மையும் கொண்டது2 அல்லது 3 செம்பருத்திப் பூக்களை ஒரு டம்ளர் நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி,தினமும் குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.

உடலும் நன்கு ஆரோக்கியம் பெறும்.

No comments

Theme images by sandsun. Powered by Blogger.