இறைவனுக்கு கற்பூர தீபம் காட்டுவது ஏன் என்று தெரியுமா?

பரம் பொருள் என்பவர் ஒளிமயமானவர். அதை குறிக்கவே தீபாரதனை வழிபாடு. தீபாராதனை ஒளியில் இறைவனின் திருவுருவம் நம் கண்களுக்கு பிரகாசமாக தெரிகிறது அல்லவா.?



மனதில் பக்தி ஒளிரும் போது தான் இறைவனை தரிசிக்க முடியும் என்பது தான் பொருள். வாசனைகள் ஒன்று சேர்ந்த பொருள் கற்பூரம். இதனை ஏற்றி இறைவனுக்கு முன் காட்டி எரிய விடும் போது நமது உணர்வுகளை பற்றும் வாசனைகள் எரிந்து உருவம் அழிந்து போகிறது என்பதையே பாவனையாக காண்கிறோம்.

மூலஸ்தானம் என்கிற கருவறை எப்போதும் இருட்டாக இருக்கும் பகுதி காற்றும் ஒளியும் வெளியிலிருந்து அங்கே செல்ல முடியாது 
பிற எண்ணங்களுக்கு இடம் தராத நம்முடையஉள்மனதை இந்த கர்ப்பகிரகம் பிரதிபலிக்கிறது. 

அதில் உறையும் இறைவன் சாதாரணமாக நமக்கு புலப்படுவது இல்லை.  திரை விலகி, மணி ஓசையுடன் தீபாராதனை நடைபெறும் போது இருள் நிறைந்த மூலஸ்தானத்தில் தூய்மையான ஒளிபரப்பில் இறைவனை நாம் காண்கிறோம்.

அது போலவே ஞானம் பிரகாசிக்கும் போதும் நம் உள்ளத்தில் அறியாமை இருள் மறைந்து உள்ளே ஒளிரும் இறைவனின் தரிசனம் நமக்கு கிட்டும் என்பதையே தீபாராதனை மூலம் நமக்கு சொல்லப்படும் செய்தி.கற்பூரம் தன்னை முற்றிலும் அழித்து கொண்டு விடுகிறது. பூரணமாய் கரைந்து போய்விடுகிறது. அதைப்போலவே இறைவன் முன் நம்மை நாம் பூரணமாக கரைந்து போய்விட வேண்டும்.

இறைவனுக்கு அவன் தந்த அனைத்தையும் அர்ப்பணித்து தன்னையே ஆத்ம சமர்ப்பணம் செய்வதே கற்பூர தீப ஆராதனையும் அதனைகண்களில்ஒற்றிக்கொண்டு இறைவனது திருவடியில் விழுந்து வழங்கும் நிகழ்வும் நமக்கு உணர்த்துகின்றன.

No comments

Theme images by sandsun. Powered by Blogger.