கோடை காலத்தில் சரும பராமரிப்புக்கு கை கொடுக்கும் குக்கும்பர் (cucumber)

ஏராளமான மருத்துவ குணம் அடங்கியுள்ள குக்கும்பர் உடலில் உள்ள நீர்ச்சத்தை தக்க வைக்க உதவுகிறது. வெயில் காலங்களில் நம் உடலிலிருந்துஅதிகப்படியான நீர் வெளியேறும் என்பதால், அதனை ஈடுகட்ட இதுபோன்ற காய்களை சாப்பிட வேண்டும். 



குக்கும்பரை அரைத்து  உங்கள் சருமத்தில் தடவிக் கொள்ளுங்கள். இது சருமத்தில் ஏற்படும் எரிச்சல் மற்றும் அரிப்பு போன்றவற்றை உடனடியாக குறைத்திடும்.

சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெயை கட்டுப்படுத்திடும். அதே சமயம், சருமத் துளைகளில் இருக்கும் அழுக்குகளை நீக்கிட உதவிடும்.

குக்கும்பரை தோல்நீக்கி பொடியாக நறுக்கி அதனுடன் தயிர் சேர்த்து நன்றாக பேஸ்டாக அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இந்த பேஸ்ட்டை முகத்தில் அப்ளை செய்து அரை மணி நேரம் கழித்து கழுவிடலாம். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்வதன் மூலம் சருமம் பொலிவாவதுடன் புத்துணர்ச்சியோடும் காணப்படும். 

முகத்தில் தோன்றிடும் கரும்புள்ளியை நீக்க, ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவை சிறிது தண்ணீரில் கலந்து கொள்ளுங்கள். ஆப்பிளை தோல் சீவி ஆப்பிள் மற்றும் வெள்ளரி இரண்டையும் பாதியளவு அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த அந்த கலவையுடன் தேன் கலந்து ஒரு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்திட வேண்டும். பின்னர் அந்த கலவையை முகத்தில் தடவி இருபது நிமிடங்கள்  காத்திருந்த பின்னர் கழுவிடலாம்.

வெள்ளரியை தோல் நீக்கி சுத்தம் செய்து நன்றாக அரைத்து பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள். தனியாக தக்காளிச்சாறுடன் இரண்டு ஸ்பூன் சந்தனம் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இரண்டையும் கலந்து முகத்தில் ஃபேஸ் மாஸ்க்காக போட வேண்டும். இருபது நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். இதனை தினமும் கூட நீங்கள் செய்யலாம்.

வெள்ளரிச்சாறு ஒரு ஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு டீஸ்ப்பூன் இரண்டையும் கலந்து முகத்தில் அப்ளை செய்து கொள்ள வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து கழுவி விடலாம். இதனை முகத்தில் அப்ளை செய்த பிறகு ஆவி பிடித்தால் இரட்டிப்பு பலன் உண்டு.

No comments

Theme images by sandsun. Powered by Blogger.