கண்களில் கருவளையம் பலருக்கு பெரும் பிரச்சனையாக இருக்கிறது. என்ன செய்யலாம்?
1) இரவு தூக்கம் என்பது தொடர்ச்சியாக 8 மணி நேரமாவது இருக்கட்டும்.
2) உருளைக்கிழங்கின் சாறு மிக நல்ல பலன் தரக்கூடியது.அதிலுள்ள மாவுச்சத்து [ ஸ்டார்ச்] கருமையை நீக்கி சருமத்தை வெளுப்பாக்கும்.
3) ரோஸ் வாட்டர் பஞ்சில் தோய்த்து இரவு படுக்கும் முன் கண்ணில் வைத்துக் கொண்டால், நாளடைவில் கருமை நீங்கி கண்கள் பளிச்சென்று இருக்கும்.
கண்களின் சோர்வினையும் நீக்கும்.
4) தரமான க்ரீம்கள் [Under Eye creams] கொண்டு கண்களை சுற்றி மெதுவாக மசாஜ் செய்தால் நல்ல பலனை தரும்.
5) வெள்ளரிக்காய் சாறை கண்களை சுற்றி தடவி வந்தால் கண்களுக்கு குளிர்ச்சியும், புத்துணர்ச்சியும் கிடைக்கும்.
6) அலோவேரா ஜெல்லும் [aloe vera] மிகவும் சிறந்த மருந்தாகும்.
7) அலோவேரா சூரியனால் ஏற்பட்ட கருமைக்கும் . கண்ணாடி தொடர்ந்து அணிவதால் கருப்பான சருமத்திற்கும் கூட நல்ல பலனை அளிக்கும்.
மேலே உள்ளவற்றில் உங்களுக்கு வசதியான ஏதேனும்
ஒன்றை தொடர்ந்து செய்து வர பலன் கிடைக்கும்.
No comments