தெய்வ வழிபாட்டில் எலுமிச்சை மாலை ஏன் பயன்படுத்துகின்றனர்????
துர்கை, பத்ரகாளி, மாரியம்மன், வைரவர் போன்ற தெய்வங்களை பூஜிக்கும் போது எலுமிச்சை மாலை சாத்துவார்கள்.
தெய்வ வழிபாட்டில் கனிமாலை சாத்தும் வழக்கம் உள்ளது. கனிமாலை என்றால் அது எலுமிச்சம் பழ மாலையையே குறிக்கும். துர்கை, பத்ரகாளி, மாரியம்மன், பைரவர் போன்ற தெய்வங்களைப் பூஜிக்கும் போது எலுமிச்சை மாலை சாத்துவார்கள்.
இம்மாலையை தயாரிப்பவர்கள், ஒரே அளவிலான நல்ல நிறமுள்ள பழங்களை மாலையாக கோர்க்க வேண்டும். எலுமிச்சம் பழங்களின் எண்ணிக்கை 108, 54, 45, 18 என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும். பழங்கள் காயாகவோ அல்லது மிகவும் பழுத்த நிலையிலோ இருந்தால் அவற்றை தவிர்ப்பது நல்லது.
உக்ரமான தெய்வங்களுக்கு கனிமாலை சாத்தும் போது, நீண்ட நாள் தடைப்பட்ட செயல்கள் கனிமாலை சாத்தி வழிபாடு செய்தால் கைகூடும் என்பது நம்பிக்கை.
No comments