இந்தியாவின் ஸ்பெஷல் ரசகுல்லா வீட்டிலே செய்வதற்கான முறை
தேவையான பொருட்கள்:
பால் - 1/2 லிட்டர்
எலுமிச்சை சாறு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
ஐஸ் கட்டி - 3
சர்க்கரை - 150 கிராம்
ஏலக்காய்த் தூள் - சிறிதளவு
பிஸ்தா - 2
செய்முறை:
பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஓரளவு சுண்டக் காய்ச்சவும். அடுத்து அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து பாலை திரியும் வரை கிளறவும். சிறிது நேரம் கழித்து ஒரு வெள்ளைத் துணியில் போட்டு நன்கு வடிகட்டிக் கொள்ளவும். அதனுள் ஐஸ் கட்டிகள் அல்லது குளிரான நீர் சேர்த்து வடிகட்டிக் கொள்ளவும்.
நன்றாக நீர் எல்லாம் வடிந்த பின்னர் திரிந்த பாலை ஒரு பாத்திரத்தில் போட்டு உருண்டைகளாக பிடித்து கொள்ளவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர், சர்க்கரைசேர்த்து அதனுள் ஏலக்காய் தூள் சேர்த்து பாகு தயார் படுத்தவும். அடுத்து உருண்டையினை அதில் போட்டு ஊற விட்டால் ரசகுல்லா தயார்.
No comments