வெட்டிவேரின் மருத்துவ குணங்கள்


மண் பானை தண்ணீர் உடலுக்கு மிகவும் நல்லது. இந்த தண்ணீரில் வெட்டி வேரை சேர்க்கும் போது கிருமிகள் அழிந்து நீர் சுத்தமாகும். உடல் சூட்டை குறைக்கும் தன்மை வெட்டி வேருக்கு உண்டு. 


கோடைகாலத்தில் நீர் கடுப்பு, தேக எரிச்சல், வயிற்றுக் கடுப்பு, போன்றவற்றால் அவதிப் படுபவர்கள் வெட்டிவேரை சுத்தம் செய்து உலர்த்திப் பொடிசெய்து கொண்டு அதனுடன் பெருஞ்சீரகம் பொடி சேர்த்து சம அளவு எடுத்து வெந்நீரில் அருந்தினால் தீர்வு கிடைக்கும்..

முகம் முழுக்க அடிக்கடி பருக்கள் தோன்றி அவதிப்படுகிறவர்களுக்கு, நல்ல மருந்தாக இருக்கிறது இந்த வெட்டிவேர் விழுது...

காய்ச்சல் மற்றும்வயிற்றில் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்தும். 

நாவறட்சி, தாகம் நீக்குவதுடன் மன மகிழ்ச்சி உண்டா
கும்.வாந்தி பேதிக்கும் இது நல்ல
மருந்தாகும்.

சளி தொந்தரவு ஏற்படாமல் இந்த வேர் பாதுகாக்கும். 

வெட்டிவேர் கவலையை நீக்கி மனதை அமைதிப்படுத்தும், மன அழுத்தத்தை நீக்கவும் பெரிதும் உதவுகிறது. 

வெட்டிவேரில் தயாரிக்கப்படும் எண்ணெய் முக அழகை கூட்டுவதோடு தோலில் ஏற்படும் காயங்களை குணப்படுத்துகிறது. 

நீண்ட நாட்களாக ஆறாமல் வடுக்கள் இருப்பின் அவற்றின் மேல் வெட்டிவேர் எண்ணெய் தடவி வந்தால் தழும்பு மறைந்து விடும்.

இதன் எண்ணெய்யை உடல் முழுவதும் தடவினால் உடலுக்கு நோய் எதிர்ப்பு மண்டலத்தை உருவாக்கி பாதுகாக்கிறது.

வெட்டிவேரின் எண்ணெய் பாலுணர்வு செய்யும் மூளையின் லிபிடோ பகுதிகளை தூண்டுகிறது. மஜாஜ் செய்வதற்கு வெட்டிவேரின் எண்ணெய்யை பயன்படுத்துகின்றனர். நமது உடலில் உள்ள போதை நீக்க பணிகளை மேற்கொள்ள உதவுகின்றது. 

எண்ணெய் தேய்த்து குளிக்கும் போதெல்லாம் சீயக்காய்க்குப் பதில் வெட்டிவேரின் பவுடரை பயன்படுத்துங்கள். இதை தொடர்ந்து செய்தால் முகத்தில் எண்ணெய் வழியாது. முகம் கூடுதல் அழகுடன் காணப்படும். வெட்டிவேரை வாங்கி பயன்படுத்துங்க ஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் சிறந்தது.

No comments

Theme images by sandsun. Powered by Blogger.