அழகை மெருகூட்டும் செம்பருத்தி டீ


செம்பருத்தி பூக்கள் மற்றும் இலைகள், தலைமுடி வளர்ச்சிக்கும் தலையில் பொடுகு உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் தீர்வாகும்.


தேங்காய் எண்ணையில் இதன் காய்ந்த மொட்டுக்களை போட்டு ஊற வைத்து தொடர்ந்து தடவி வ
ந்தால் கூந்தலின் கருமை நிறம் பாதுகாக்கப்படும்.

உணவில் செம்பருத்தி பூவை சேர்த்துக் கொள்வதால் சோர்வு நீங்கும். 

இதன் இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து டீயாக அருந்தினால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும். உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.
தொடர்ந்து இதை பயன்படுத்தும் போது ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரையும். அதிகப்படியான கொழுப்பு சேர்வதை தடுக்கும். 

உடலுக்கு குளிர்ச்சி அளிக்க வல்லது. சருமத்தை பளபளப்பாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

செம்பருத்தி டீ செய்யும் முறை:

செம்பருத்தி இதழ் (காய்ந்தது) – 5 இதழ்
தண்ணீர் – 1 டம்ளர்
சக்கரை – 1 ஸ்பூன்
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் 1 டம்ளர் வைத்து கொதிக்க விடவும் .பின் செம்பருத்தி இதழை போட்டு 5 நிமிடம் கொதித்தபின் அடுப்பை அனைத்து வடிக்கட்டி சக்கரை போட்டு குடிக்கவும்.
ஒரு நாளைக்கு 2 – 3 தடவை குடிக்கலாம். காலை உணவுக்கு பின் குடிப்பது உடலுக்கு நல்லது.


No comments

Theme images by sandsun. Powered by Blogger.