நிலவேம்பில் உள்ள மருத்துவ குணங்கள்

 

உடல் வலிமை, குடல் பூச்சிகள் அழிய,  பன்றி காய்ச்சல் போன்ற அனைத்து கொடிய வியாதிகளையும் தீர்க்கும்  நிவாரணி நிலவேம்பு. 


வயிற்றில் உள்ள வாயுக்கள் மந்தமாகி பசியற்ற தன்மையை ஏற்படுத்திவிடுகின்றன. இதனால் பசி என்பதே சிலருக்கு ஏற்படுவதில்லை. இவர்கள் நிலவேம்பினை  உலர்த்தி பொடி செய்து அதனை காலையில் மட்டும் கஷாயம் செய்து குடித்து வந்தால் பசி நன்கு உண்டாகும்.

வயிற்றுப் பூச்சிகள் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் அனைத்தையும் உறிஞ்சிவிடுகின்றன. இதனால் உடல் தேறாமல் நோயின் தாக்குதலுக்கு ஆளாக  நேரிடும். வயிற்றுப் பூச்சி நீங்க நிலவேம்பு இலையை நீரில் கொதிக்க வைத்து கஷாயமாக்கி மூன்று நாட்கள் தொடர்ந்து காலைவேளையில் அருந்தி வந்தால்  வயிற்றுப் பூச்சிகள் நீங்கும்.

உடல் தேறாமல் மெலிந்து காணப்படுபவர்கள் நில வேம்பு  கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் வலுப்பெறும்

சிலருக்கு அடிக்கடி மயக்கம் உண்டாகும். அதிர்ச்சியான நிகழ்வுகளைக் காணும்போது மயக்கம் ஏற்படும். இந்த மயக்கம் தீர நிலவேம்பு கஷாயம் செய்து அருந்துவது நல்லது.

பித்த நீர் உடலில் அதிகமானால் உடலில் பல நோய்கள் உருவாகிறது. இதனால் வாந்தி, மயக்கம் உண்டாகும். இவர்கள் நிலவேம்பினை உலர்த்தி  பொடி செய்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் பித்தம் குறையும்.

நிலவேம்பு  உடலில் உள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்தும் குணம் வாய்ந்தது.

No comments

Theme images by sandsun. Powered by Blogger.