திராட்சைப் பழத்தில் இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளதா!!!

 திராட்சைப் பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. ஊட்டச்சத்து நிறைந்த பழங்களுள் ஒன்றான திராட்சையில் வைட்டமின்கள் பி1, பி2, பி6, பி12 மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளன. இவைத் தவிர , இரும்புச்சத்தும் அதிக அளவில் காணப்படுகின்றன.

இப்பழத்தை சாப்பிட்டால் பித்தம் தணியும், உடல் வறட்சியைநீக்கும். 
இரத்தத்தை சுத்தப்படுத்தி புதிய ரத்தத்தை ஊறவைக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. 

நரம்புகளுக்கு வலுவூட்டுகிறது. அதனால் மூளையும், இதயமும் வலிமை பெறும்.

கல்லீரலின் பலவீனத்தால் உணவு செரிமானமாகாத தொல்லையை நீக்கும்.

சிறுகுழந்தைகளுக்கு பல்முளைக்கும் காலங்களில் மலச்சிக்கல் உண்டாகும். ஒரு சிலகுழந்தைகளுக்கு வலிப்பு நோயும், உண்டாகும். இதற்கு திராட்சைச் சாறு அருமருந்தாகிறது.

ஜலதோஷத்தினால் ஏற்படும் நீர்வடிதல், இருமல், தும்மல் போன்றவற்றை திராட்சை பழச்சாறு குணப்படுத்துகிறது. 

மார்புச்சளியை போக்குகிறது. நுரையீரலை பாதுகாக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.

ரத்த சோகைக்கும் காமாலை நோய்க்கும் கூட இது சிறந்த மருந்தாகிறது. 

குடல் மற்றும் உடல்புண்ணையும் ஆற்றும் தன்மை கொண்டது. 

களைப்பைப் போக்கி ஆழ்ந்த உறக்கத்தைத் தரும். அஜீரணம், பசியின்மை,  போன்றவற்றுக்கு திராட்சை சிறந்த மருந்து.

திராட்சைப் பழத்தின் தோலில் புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றலும், இதயத்தை வலுப்படுத்தும் ஆற்றலும் உண்டு.

No comments

Theme images by sandsun. Powered by Blogger.