அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்திற்கான அனுமதிப்பத்திரத்தின் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது


 பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள இந்த கால கட்டத்தில் அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்வதற்காக வழங்கப்பட்ட அனுமத்திப் பத்திரத்தின் செல்லுபடியாகும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.


அதன்படி ,இது இம்மாதம் 21 ஆம் திகதி வரை அனுமதிபத்திரம் செல்லுபடியாகும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.

மேலும் ,நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்டுள்ள வேளையில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் நடமாடும் வியாபாரம் மூலமும் இணையம் மூலமும் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Theme images by sandsun. Powered by Blogger.