சைவ உணவை விரும்பாதவரா நீங்கள்?? இதோ உங்களுக்காக சுவையான வெஜிடேபிள் பிரியாணி
1 கப் நனைத்து பாசுமதி அரிசி
1 கப் வெட்டப்பட்ட வெங்காயம்
1 கப் நறுக்கிய பூக்கோசு
1 கப் மெலிதாக நறுக்கிய பச்சை பீன்ஸ்
1 கப் துண்டுகளாக்கி கேரட்
1/2 கப் பட்டாணி
1 தேக்கரண்டி இஞ்சி பேஸ்ட்
1 தேக்கரண்டி பூண்டு பேஸ்ட்
1 கப் தக்காளி சாறு
தேவையான அளவு புதினா இலை
1 கைப்பிடியளவு கொத்தமல்லி இலை
4 தேக்கரண்டி நெய்
1 கப் தயிர்
தேவையான அளவு கறுவாப்பட்டை
3 புரியாணி இலை அல்லது இறம்பை இலை
தேவையான அளவு கிராம்பு
தேவையான அளவு பெருங்காய தூள்
தேவையான அளவு உப்பு
தேவையான அளவு மிளகாய் பொடி
தேவையான அளவு சீரகம்
தேவையான அளவு நீர்
1 தேக்கரண்டி கரம் மசாலா தூள்
தேவையான அளவு ஏலக்காய்.
செய்முறை...
ஒரு பாத்திரத்தில் அரிசி சேர்த்து கழுவி 5-10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
ஒரு வாணலியில் அரிசி மற்றும் அதற்கு ஏற்ற அளவு தண்ணீர், உப்பு, இறம்பை இலை அல்லது பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து கொதிக்கவிடவும். தண்ணீர் கொதிக்கும் போது ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து முதலில் சமைத்துக் கொள்ளவும்
பின்னர், ஒரு வாணலியில் சிறிது நெய் சேர்க்கவும். நெய் சூடானதும் அதில் இஞ்சி பூண்டு விழுது, சீரகம் மற்றும் வெங்காயம் சேர்க்கவும். வெங்காயம் வதங்க தொடங்கியதும் அதில் ஏலக்காய், பெருங்காயத்தூள் சேர்க்கவும்.
பிறகு அதில் காலிஃபிளவர், கேரட், பீன்ஸ் சேர்த்து 2-3 நிமிடங்கள் சமைக்கவும். பின்பு சிறிது உப்பு சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் வதக்கவும். இப்போது தக்காளி விழுது சேர்த்து நன்கு கலக்கவும்.
அடுத்தபடியாக மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, பட்டாணி மற்றும் தயிர் சேர்த்து காய்கறிகள் சிறிது மென்மையாக மாறும் வரை வதக்கி பின் பாத்திரத்தை 5 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
வேறு ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் வதக்கி வைத்துள்ள காய்கறி கலவையை சேர்த்து அதன் மீது ஒரு அடுக்கு அரிசி சேர்க்கவும். இதே போல் காய்கறி மற்றும் அரிசியை இரெண்டு அடுக்காக சேர்த்து கொள்ளவும். பின்பு அதன் மேல் வெங்காயம், புதினா மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து அலங்கரிக்கவும்.
இதை ஒரு நிமிடம் 5 அடுப்பில் குறைந்து தீயில் வைத்து இறக்கினால் சுவையான வெஜிடேபிள் பிரியாணி ரெடி
No comments