கோடை காலத்தில் சருமத்தை பராமரிக்க உதவும் மாம்பழம்
மாம்பழத்தில் சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வைட்டமின் ஈ அதிக அளவில் நிறைந்துள்ளது. ஆகவே மாம்பழத்தை சாப்பிடுவதோடு, அதனைக் கொண்டு அழகைப் பராமரிக்கவும் முயற்சி செய்யுங்கள்.
முகப்பரு, சருமம் கருமையாதல், சரும சுருக்கம் போன்றவை அதிக வெயில் காரணமாக ஏற்படும் சரும பிரச்சினைகள் ஆகும்.
சரும சுருக்கத்தைத் தடுக்க...
மாம்பழத்தை வெட்டி சாப்பிட்ட பின்னர், அதன் தோலைக் கொண்டு முகத்தில் தடவி 10-15 நிமிடம் உலர வைத்து, பின் அதனை குளிர்ந்த நீரில் கழுவி வர வேண்டும். இப்படி ஒருநாள் விட்டு ஒருநாள் செய்து வந்தால், சருமம் மென்மையாக, சுருக்கமின்றி இருக்கும்.
கருமையைப் போக்கி சருமத்தை பொலிவாக மாற்ற...
மாம்பழத்தை அரைத்து, அதில் சிறிது பால் சேர்த்து கலந்து, முகம் கை மற்றும் கால்களுக்கு தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இப்படி வாரம் மூன்று முறை செய்து வந்தால், சருமத்தில் வெயிலினால் ஏற்பட்ட கருமை நீங்கும்.
அல்லது....
மாம்பழத்தின் தோலை வெயிலில் உலர வைத்து, பின் பொடி செய்து, அதில் 1 டீஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இந்த மாதிரி வாரம் மூன்று முறை செய்து வர, சருமம் பொலிவோடு திகழும்.
பருக்களைப் போக்க...
ஒரு துண்டு மாங்காயை நீரில் போட்டு வேக வைத்து, அந்த நீரைக் கொண்டு தினமும் இரவில் படுக்கும் முன் தடவிக் கொள்ள வேண்டும். இப்படி செய்து வந்தால், மாங்காயில் உள்ள பொருளானது, அழுக்குகள் மற்றும் எண்ணெய்களால் சருமத்துளைகளில் அடைப்பு ஏற்படுவதைத் தடுத்து, கோடையில் பருக்கள் வருவதைத் தடுக்கும்.
புத்துணர்ச்சியான சருமத்திற்கு...
1 பழுத்த மாம்பழத்தினை பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவி வர, சருமம் சோர்வின்றி புத்துணர்ச்சியோடு காணப்படும்.
No comments