வீட்டிலே இலகுவாக பன்னீர் தயாரிக்கும் முறை
தேவையான பொருட்கள்
பால் - 2 லிட்டர்
எலுமிச்சை பழம் - 2
செய்முறை
எலுமிச்சையை விதை இல்லாமல் பிழிந்து சாறு எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
ஒரு பாத்திரத்தில் 2 லிட்டர் பாலை விட்டு அடுப்பில் வைத்து சூடு பண்ணுங்கள். பால் முதல் கொதித்தது வருகின்ற மாதிரி எழும்பி வரும் சமயம் அடுப்பை அணைத்து விடுங்கள். பிழிந்து வைத்திருக்கும் எலுமிச்சை சாறை பாலில் ஊற்றி விடுங்கள். பாலை கரண்டியால் நன்றாக கலக்கி கொண்டே இருங்கள்.
பன்னீர் சிறிது நேரம் கலக்கும் பொழுது பால் சிறு சிறு துண்டுகளாக பிரிந்து வரும். வெதுவெதுப்பான சூடு இருக்கும் பொழுது காட்டன் துணியில் பாலை வடிகட்டுங்கள். துணியை சுருட்டி நன்றாக பிழிந்து கொள்ளுங்கள். அதன்பிறகு துணி மூட்டையை ஒரு தட்டில் வைத்து ஏதாவது கனமான பொருளை அதன் மேல் வைத்து ஒரு 3 மணி நேரம் அப்படியே விட்டுவிடுங்கள்.
3 மணி நேரம் கழித்து எடுத்துப்பார்த்தால் உங்களுக்கு தேவையான பன்னீர் அழகாக ரெடி ஆகி இருக்கும்.
உங்கள் தேவைக்கு ஏற்ற அளவுகளில் துண்டுகளாக போட்டு வைத்து கொள்ளுங்கள்.
No comments