கால் நகங்களின் அழகை பராமரிப்பது எப்படி

கை விரல்கள் போலல்லாமல் கால் நகங்கள் நிறைய பேருக்கு அழுக்கடைந்து, உடைந்தும் சொத்தையாகவும் இருக்கும். இது சரியான பராமரிப்பு இல்லாததால் ஏற்படுகின்றன. இறந்த செல்கள் நகங்களுக்கு அடியில் தங்கி நகங்களில் ரத்த ஓட்டம் குறைந்து சொத்தையாகின்றன.



நகங்கள் பழுதடைந்தால், வலி ஏற்படுவதோடு நகங்கள் பழுப்பாக அல்லது மஞ்சளாக காணப்படும்.


மஞ்சள் : 

தினமும் குளிப்பதற்கு முன், மஞ்சள் பொடியை ஆலிவ் எண்ணெயில் கலந்து, நகங்களில் தடவி வட்ட வடிவமாக மசாஜ் செய்யுங்கள். ஐந்து நிமிடங்கள் கழித்து குளிக்கச் செல்லலாம். இது நல்ல பலனைத் தரும். நகங்களில் ஏற்படும் தொற்றினை இது எதிர்க்கும்.

லாவெண்டர் எண்ணெய் :

லாவெண்டர் எண்ணையில் சில துளி ஆலிவ் எண்ணெயை சேர்த்து, நன்றாக கலக்குங்கள். இந்த எண்ணெயைக் கொண்டு நகத்தில் தடவி மசாஜ் செய்தால், நாளடைவில் சொத்தை மறைந்து நல்ல நகங்கள் உருவாகும்.

எலுமிச்சை சாறு :

எலுமிச்சை சாறினை  ஒரு பஞ்சினால் எடுத்து, அதனை நகங்களில் பூசி வந்தால், பூஞ்சை தொற்று மற்றும் அழுக்குகள் நீங்கும். நாளடைவில் நகங்கள் அழகாக மாற்றமடையும். 

வேப்பிலை : 

வேப்பிலை மிகவும் சக்தி வாய்ந்த மூலிகை. ஒரு கைப்பிடி வேப்பிலையை எடுத்து, ஒரு கப் அளவுள்ள நீரில் போட்டு கொதிக்க வையுங்கள். நன்றாக கொதித்து வந்ததும், வடிகட்டி, அந்த நீரை எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அந்த நீரில் சிறிது பூண்டு எண்ணெய் சேர்த்து அந்த கலவையை நகங்களில் தடவி வந்தால், சொத்தை மறைந்து, நகங்கள் பலம் பெறும்.

சாமந்தி : 

சாமந்தி பூக்கள் மருத்துவ குணங்கள் பெற்றுள்ளவை. சருமத்தில் ஏற்படும் தொற்றுக்களை எதிர்க்கும். சாமந்தி பூக்களை தனித் தனி இதழ்களாக பிரித்து, சுடு நீரில் போட்டு மூடி வையுங்கள். 20 நிமிடங்கள் கழித்து அந்த நீரில் கால்களை அமிழ்த்துங்கள். இவை நகங்களில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கின்றன.

அதிமதுரம் :

அதி மதுரத்தை நீரில் போட்டு நன்றாக கொதிக்க விடுங்கள். 15 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்கவும். பின்னர் நீர் வெதுவெதுப்பானவுடன் அந்த நீரில் பஞ்சை நனைத்து, மெதுவாய் நகங்கள் மீது தடவவும். இது நகத்தில் தங்கும் கிருமிகளை அழித்து, நகங்களை பாதுகாக்கும்.

No comments

Theme images by sandsun. Powered by Blogger.