கற்றாழையின் மகத்தான சில குணங்கள்

 தீக் காயங்கள் ஏதும் ஏற்பட்டால் உடனடியாக கற்றாழை ஜெல்லினை காயம் ஏற்பட்ட இடத்தில் வைத்து கட்டி விட்டால் ஏற்பட்ட பாதிப்புகள் குறைந்து விடும்.. 




கற்றாழையின் சோற்றை  சாப்பிட்டு வர வெப்ப நோய்கள்யாவும் தீரும். சருமம்  வறண்டு போகாமல்  ஈரப்பதத்துடன்  ஜொலிக்கும்.
கற்றாழை ஜெல்லை அடிபட்ட வீக்கங்களுக்கு வைத்து கட்டி வர வீக்கம் தீரும்.

இளம் பெண்களுக்கு ஏற்படும் மாத விலக்கு தொடர்பான நோய்களுக்கு  சர்க்கரையுடன் கற்றாழை ஜெல்லை கலந்து நன்றாக மிக்சியில் அரைத்து சாப்பிட குணமாகும். 

கற்றாழை ஜெல்லினை கொண்டு எண்ணெய்   தயாரித்து தலைக்கு தேய்த்து வர முடி  உதிர்வது நாளடைவில் குறைந்து விடும். 

கற்றாழை ஜெல்லை பசு மோரில் கலந்து குடித்து வர உடல் சூட்டினால் முகத்தில் வரும் பருக்கள், வெயிலினால் தோலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் கருந்திட்டுக்கள் மறைந்து போகும்.

சில பெண்களுக்கு முகத்தில்  பருக்களால் உண்டான காயங்கள்  மாறாமல் அப்படியே காணப்படும். அவ்வாறு உள்ளவர்கள் இதன் ஜெல்லை முகத்தில் தேய்த்துக் கழுவி வந்தால் நாளடைவில் காயங்கள் மறைய ஆரம்பித்து முகம் பொலிவாக ஜொலிக்கும்.

கற்றாழை மடலைக் கீறி சாறெடுத்து,அதை தேங்காய் எண்ணெயுடன் கலந்து 40 நாள் வெயிலில் வைத்து இதை தலைக்கு 
தொடர்ந்து தேய்த்து வாருங்கள். தலைமுடி நன்கு செழித்து வளரும்   

காலையில் வெறும் வயிற்றில் கற்றாழையை  சிறு துண்டுகளை தினமும் சாப்பிட்டு வர உடல் பருக்காமலே, உடல் சோர்வு மறையும்,  தாது விருத்தி ஏற்படும். பிள்ளைப்பேறு வேண்டுபவர்கள் இதை சாப்பிட்டு வந்தால் நாளடைவில் நல்ல முன்னேற்றம் பெறலாம்

கோடைக்காலத்தில் உருவாகக் கூடிய நீர்கடுப்பு, நீர்தாரை எரிச்சல், மாதவிடாய்  கோளாறுகள், உடல் வெப்பம், போன்ற பாதிப்புகளுக்கு, சோற்றுக் கற்றாழையின் ஜெல்லை  எடுத்து சுத்தமான நீரில் அலசிக்  கொள்ள வேண்டும். பிறகு அதற்குச் சமமானஅளவில் பனங்கற்கண்டினை சேர்த்து காலை, மாலை இருவேளைகளிலும்  உண்டு வரவேண்டும். இதனால் உடல்  உஷ்ணமும்,  எரிச்சலும் குறையும்.

வெயில் காலத்தில் சிலருக்கு கண்களில் எரிச்சல் உண்டாகி, கண்கள் சிவந்து விடும்.  அப்போது, கற்றாழையின் ஒரு துண்டை  எடுத்து  இரண்டாகப் பிளந்து,  கண்களை மூடி கண்களின் மீது அந்தத் கற்றாழை துண்டை வைத்துக் கொண்டு  சற்று நேரம் அப்படியே படுத்திருக்க வேண்டும். அப்போது கண் எரிச்சல், குறைவதோடு, சிவந்தநிறமும் மறைந்து விடும். இதை இரவு நேரங்களில் தூங்குவதற்கு முன் செய்து வந்தால் நல்ல உறக்கம்  வருவதோடு,  உடலுக்கு பல நன்மைகளும்  கிடைக்கும்.

இரவு  படுக்கும் முன் கற்றாழையின்  ஜெல்லினை பாதத்தின் அடியில் தடவிக் கொண்டு படுக்கலாம்.  இதனால் பாத  எரிச்சல் குறைவதோடு, பாத வெடிப்புகளும்  குணமாகும்.

No comments

Theme images by sandsun. Powered by Blogger.