சுவையான காலிஃப்ளவர் பக்கோடா செய்முறை
தேவையானபொருட்கள்..
½ கப் கடலை மாவு
¼ கப் அரிசி மாவு
¼ கப் சோள மாவு
1 முழு காலிஃப்ளவர் பூ
2 பெரிய வெங்காயம்
3 பச்சை மிளகாய்
3பல் பூண்டு
1 துண்டு இஞ்சி
தேவையான அளவு மிளகாய் தூள்
தேவையான அளவு உப்பு
தேவையான அளவு எண்ணெய்
செய்முறை..
முதலில் காலிஃப்ளவர், வெங்காயம், மற்றும் பச்சை மிளகாயை நறுக்கவும் , பின் இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி வைத்து கொள்ளவும்.
அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் காலிஃப்ளவரை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சிறிதளவு உப்பு சேர்த்து 2-3 நிமிடம் வரை
காலிஃப்ளவரை போட்டு வேக வைக்கவும்.
2 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு காலிஃப்ளவரில் இருக்கும் தண்ணீரை வடிகட்டி காலிஃப்ளவரை எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
பின்பு ஒரு bowl லை எடுத்து அதில் கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு, தேவையான அளவு உப்பு, மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூளை போட்டு அதை நன்கு கலந்து விடவும்.
பின்னர் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய், மற்றும் நாம் தயார் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்டை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
பிறகு அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அதை நன்கு பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும். பின்பு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் காலிஃப்ளவரை போட்டு அதை நன்கு கலந்து விடவும்.
அடுத்து ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சுட வைக்கவும்.
எண்ணெய் சுட்ட பின் கடாயின் அளவிற்கேற்ப அதில் ஒவ்வொன்றாக காலிஃப்ளவரை எடுத்து பக்குவமாக எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.
இவ்வாறே மீதமுள்ள காலிஃப்ளவர்களையும் எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்து கொள்ளவும்.
இப்பொழுது உங்கள் சுவையான காலிஃப்ளவர் பக்கோடா தயார்.
No comments