ஆரோக்கியமான கூந்தலுக்கு தேவையான உணவுகள்

நமது உணவு  பழக்கமே நமது ஆரோக்கியமான கூந்தலுக்கு சாதகமாகவோ , பாதகமாகவோ அமையும் என்ற விஷயத்தை , நாம் அனுபவத்தில் உணரும்போது கணிசமான அளவில் நமது கூந்தலை இழந்திருப்போம்.




ஒருவாரம் , அல்லது பத்துநாள் சாப்பிட்டு விட்டு உடனே பலன் எதிர்பார்க்காதீர்கள்.
குறைந்த பட்சம்  3 மாதத்தின் பின்னர் பலனை எதிர்பாருங்கள். 

கறிவேப்பிலை

எவ்வளவு அதிகம் உணவில் சேர்த்துக் கொள்கின்றமோ அவ்வளவு  நல்லது. நமக்கு விருப்பமான ருசிக்கு , அதன் குணம் கெடாமல் எடுத்துக் கொள்ளலாம்.

கரட் 

சருமம்,தலைமுடி மற்றும் , கண்ணுக்கு ரொம்ப அவசியம். ஆகையால் தினமும் ஒரு கரட்டை உண்பதை பழக்கம் ஆக்கிக் கொ‌ள்ளு‌ங்க‌ள். 

கீரை வகைகள்

கீரை வகைகள் அனைத்தும் நல்ல பலன் தரக்கூடியவை அதிலும், முருங்கைகீரை மிக  நல்ல பயன் தரும் 

நெல்லிக்காய்
 
நமது ஆரோக்கியத்திற்கு அருமருந்து என்றும் சொல்லலாம் . உணவாகவோ அல்லது எண்ணெய் தயாரித்தோ நெல்லிக்காயை பயன் படுத்தலாம். 

இளநீர்

உடல் சூடு காரணமாக முடிகொட்டும் பிரச்சினை உள்ளவர்கள் இளநீர் அருந்தலாம். 
  

பேரீச்சை

இரும்புச்சத்து சத்து நிறைந்த பேரீட்சையை உண்பதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். 


மற்றும் சிக்கன், வேக வைத்த முட்டை, மீன்வகைகள், ஈரல், fresh milk, cheese, paneer.
கரட், பீட்ரூட். சோயா பீன்ஸ், வற்றாளை கிழங்கு 
இளநீர்,வழுக்கைதேங்காய்,பாதாம், 
வேர்க்கடலைஉலர் அத்தி. கிஸ்மிஸ் கீரைகள்,  
தயிர், மோர்,பழ வகைகள் போன்றவையும் மிகவும் சிறப்பான உணவுகள். 


இது அனைத்தையும் விட மிக
முக்கியமானது 10 -12 கிளாஸ் தண்ணீர் தினமும் பருக வேண்டும்.

No comments

Theme images by sandsun. Powered by Blogger.