கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் வெளியாக உள்ள திரைப்படம்......
வணக்கம் சென்னை, காளி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் கிருத்திகா உதயநிதி.
இந்நிலையில் கிருத்திகா உதயநிதியின் அடுத்து இயக்கவிருக்கும் திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார் கிருத்திகா உதயநிதி.
அண்மையில் வெளியான பாவக்கதைகள் படத்தின் ஒரு பகுதியை இயக்குநர் சுதா கொங்காரா இயக்கியிருந்தார். தங்கம் என்கிற சிறுகதையை மையமாக வைத்து உருவான அந்த கதையில் மிகவும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்ததற்காக காளிதாஸ் ஜெயராம் பாராட்டப்பட்டார்.
இந்த படத்தில் விஜய் சேதுபதியின் கருப்பன் திரைப்படங்களில் நடித்த தன்யா ரவிச்சந்திரன் காளிதாஸூடன் இணைந்து நடிக்கிறார். இந்த படத்துக்கு ரிச்சர்டு எம் நாதன் ஒளிப்பதிவு செய்கிறார்.
No comments