கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக்கொண்ட நடிகர் சூரியா மற்றும் ஜோதிகா
தடுப்பூசி செலுத்துதல் தொடர்பான வதந்திகளை நம்பி மக்கள் சிலர் தடுப்பூசிகளை செலுத்த பின் வாங்குகின்றார்கள்.
கொரோனாவிலிருந்து, நம்மை காக்கும் ஆயுதமாக தடுப்பூசிகள் விளங்குகின்றன’ என்று மருத்துவத்துறையினர் பரிந்துரைக்கின்றனர். அதன்படி, இந்திய மக்கள் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டு வருகின்றனர். அதேசமயம், தடுப்பூசிகள் குறித்த தவறான வதந்திகளால் மக்கள் அச்சப்பட்டு தவிர்த்தும் வருகின்றனர்.
மேலும் ,இதனால், மக்களின் அச்சங்களை போக்குவதோடு, தங்களையும் காத்துக்கொள்ள திரைத்துறையினர், அரசியல்வாதிகள் பலரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதோடு, அது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றார்கள். அந்த வகையில் இன்று நடிகர் சூர்யாவும், அவரது மனைவியும் நடிகையுமான ஜோதிகாவும் வடபழனியிலுள்ள சூர்யா மருத்துவமனையில் இன்று தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டனர்.
No comments