சுவையான மட்டன் சூப் செய்முறை

 

தேவையான பொருட்கள்:

மட்டன் எலும்பு – கால் கிலோ
மஞ்சள்தூள் – அரை தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப‌
இஞ்சி-பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
வெங்காயம் – 2
தக்காளி – 2
மல்லித் தூள் -2 தேக்கரண்டி
மிளகுத்தூள் – ஒரு தேக்கரண்டி
சீரகத்தூள் – ஒரு தேக்கரண்டி
நல்லெண்ணெய் – 3 தேக்கரண்டி
பட்டை – சிறு துண்டு
கிராம்பு – 2
கறிவேப்பிலை – தேவைக்கேற்ப 
கொத்துமல்லித் தழை – சிறிது


செய்முறை:

மட்டன் எலும்புடன் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், உப்பு, ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் மற்றும் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். 

ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.அதனுடன் மல்லித் தூள், மிளகுத் தூள், சீரகத்தூள், தேவையான‌ அளவு  உப்பு சேர்த்து வதக்கவும்.
வதக்கியவற்றுடன் வேக வைத்த ‌எலும்புத் துண்டுகளை சேர்க்கவும். சிறிது நேரம் கொதிக்க விட்டு கொத்துமல்லித் தழை தூவி இறக்கவும். 

இதோ சூடான‌ சுவையான‌ மட்டன் சூப் தயார்.


குறிப்பு -    நல்லெண்ணெயை விரும்பாதவர்கள் மரக்கறி எண்ணெய்யும் பயன்படுத்தலாம்.

No comments

Theme images by sandsun. Powered by Blogger.