இயற்கை அழகுக்கு விளக்கெண்ணையின் அற்புதமான பலன்கள்

 ஆமணக்கு செடியின் விதைகளினால் தயாரிக்கப்படும் ஒரு ஆரோக்கியமான எண்ணெய் தான் விளக்கெண்ணெய். இந்த எண்ணெயில் ரிசினோலியிக் ஆசிட் அதிகம் உள்ளது. எனவே இத்தகைய எண்ணெயை அழகு பராமரிப்பில் பயன்படுத்தினால், சருமம் அழகாவதோடு, கூந்தலும் நன்கு பொலிவோடு காணப்படும்.


ஹேர் கண்டிஷனர்

கூந்தலுக்கு கெமிக்கல் கலந்து ஹேர் கண்டிஷனர்களைப் பயன்படுத்துவதை விட, விளக்கெண்ணெயை தலைக்கு குளிக்கும் முன் 15 நிமிடம் ஊற வைத்து, பின்னர் ஷாம்போ  போட்டு குளிக்க, நல்ல கண்டிஷனர் போட்டது போல் இருக்கும்.

அடர்த்தியான கருமையான புருவங்களுக்கு

சிலருக்கு புருவங்களில் அடர்த்தி குறைந்து காணப்படும். அவ்வாறு உள்ளவர்கள் இரவில் தூங்கச் செல்லும் முன் விளக்கெண்ணெயை தங்களது புருவங்களில் பூசி வர சில வாரங்களில் புருவங்கள் கருமை நிறத்தில் வளர ஆரம்பிக்கும். இதுவே புருவங்களின் வளர்ச்சிக்கு மிகவும் சிறப்பான பொருள். 


கை மற்றும் நகப் பராமரிப்பு

தினமும் இரவில் கைகளுக்கு விளக்கெண்ணெய் பயன்படுத்தி மசாஜ் செய்து வந்தால், கைகளில் இருக்கும் சுருக்கங்கள் அனைத்து நீங்கிவிடும். மேலும் தினமும் இரவில் படுக்கும் முன் நகங்களில் விளக்கெண்ணெயை வைத்து வந்தால், நகங்கள் நன்கு பொலிவோடு அழகாக வறட்சியின்றி காணப்படும்.

குதிகால் வெடிப்புக்கள்

குதிகால் வெடிப்புக்கள் இருந்தால், தினமும் விளக்கெண்ணெய் தடவி வர, குதிகால்களில் இருக்கும் வறட்சி நீங்கி, வெடிப்புக்களும் விரைவில் போய்விடும்.

கூந்தல் வளர்ச்சி

பழங்காலத்தில் கூந்தல் வளர்ச்சிக்கு விளக்கெண்ணெயைத் தான் பயன்படுத்தி வந்தார்கள். எனவே அத்தகைய எண்ணெயை வைத்து, வாரத்திற்கு ஒரு முறை மசாஜ் செய்து, 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின்  ஷாம்போ  போட்டு கு

ளித்தால், கூந்தல் வளர்ச்சியுடன் அடர்த்தியான கருமையான கூந்தலையும் பெறலாம்.

முதுமைத் தோற்றம்

சிலருக்கு இளம் வயதிலேயே முதுமை தோற்றம் காணப்படும். அத்தகையவர்கள், இரவில் விளக்கெண்ணெய் கொண்டு  சருமத்தை தொடர்ந்து மசாஜ் செய்து வந்தால், தளர்ந்து காணப்படும் சருமம் இறுக்கமடைந்து, இளமை தோற்றத்தில் காணப்படுவார்கள்.

No comments

Theme images by sandsun. Powered by Blogger.