உலர் திராட்சையில் உள்ள மகத்தான குணங்கள்
வளரும் குழந்தைகளுக்கு உலர் திராட்சை சிறந்ததாகும். இதில் கல்சியம் சத்துகள் நிறைந்துள்ளதால் எலும்புகள் உறுதிபெறவும், பற்கள் வலுப்பெறவும், உடல் வளர்ச்சி பெறவும் இது உதவுகிறது
குழந்தைகளுக்கு தேகபுஷ்டி வேண்டுமென்றால் தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு பாலில் போட்டு காய்ச்சி அருந்தச்செய்யுங்கள்
தொண்டை யில் கட்டு ஏற்பட்டவர்கள் பால் காய்ச்சும் போது மிளகுதூள் மற்றும் உலர்திராட்சையை போட்டு பருகலாம்.
உடல் வலியால் அவதிப் படுபவர்கள் சுக்கு மற்றும் உலர்திராட்சையை யும் சேர்த்து தண்ணீர் விட்டு காய்ச்சி பருகினால் உடல் வலி தீரும்.
கர்ப்பிணிபெண்களும் பாலில் உலர் திராட்சை சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்.
ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திரட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமடையும். சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வல்லமையை கொண்டுள்ளது இந்த உலர் திராட்சை.
மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இரு வேளை உலர்திராட்சையை சாப்பிட்டு வர காமாலை நோய் குணமடையும்.
தினமும் ஒரு பத்து உலர் திராட்சை பழத்தை தொடர்ந்து ஒரு மூன்று மாதம் சாப்பிட்டு பாருங்கள் உங்களுக்கே பல மாற்றங்கள் தெரியும்.
No comments