கோடையில் அதிகம் கிடைக்கும் தர்பூசணியை கொண்டு சருமத்தை அழகுபடுத்தலாமா?
கோடைக்காலத்தில் கிடைக்கும் தர்பூசணி பழம் உடலுக்கு குளிர்ச்சியை தருவதை மட்டுமின்றி சருமத்திற்கும் மிகவும் நல்லது.
வெயில் காலத்தில் தினமும் தர்பூசணி ஜூஸ் குடித்தால், உடலை வறட்சியின்றி வைப்பதோடு,
சருமத்தை பொலிவோடு வைப்பதற்கும் உதவும். உடலுக்கு இரும்பு சத்தும் நிறைந்ததாகும்.
தர்பூசணி ஒரு நேச்சுரல் டோனர். இந்த சிவப்பு நிற பழத்தின் சாற்றை தேனில் கலந்து முகத்திற்கு தடவினால், முகம் நன்கு பொலிவாகும்.
தர்பூசணியில் லைகோபைன், மற்றும் ஏ அதிகம் உள்ளது. எனவே இதன் சாற்றை சருமத்திற்கு பயன்படுத்தினால், முகத்தில் உள்ள சுருக்கங்கள், கோடுகள் மற்றும் முதுமை தோற்றம் மறையும்.
தர்பூசணியில் உள்ள வைட்டமின் ஏ, சருமத்துளைகளின் அளவை குறைத்து,சருமத்தில் இருந்து அதிக எண்ணெய் வெளியேறுவதை தடுக்கும்.
முகத்தில் பருக்கள் இருந்தால், தர்பூசணி சாற்றை சருமத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இதனால் முகப்பரு நீக்கும் சாத்தியம் உள்ளது.
தர்பூசணியின் சாற்றை காட்டனில் நனைத்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவுவதால் சருமம் பொலிவாவதுடன் புத்துணர்ச்சியோடும் காணப்படும்.
தர்பூசணியை வைத்து ஃபேஸ் பேக் போட வேண்டும் என நினைத்தால் அதனுடன் தேன் மற்றும் தயிர் சேர்த்து பயன்படுத்துவது அதிக நன்மைகளை தரக்கூடும்.
No comments