சுவையான இராசவள்ளிக் கிழங்கு கூழ்
தேவையான பொருட்கள்:-
இராசவள்ளிக் கிழங்கு - 1 சிறிது
தேங்காய்ப் பால் - 1 கப் (முதற்பால்)
சீனி - 3 மே.கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:-
கிழங்கை தோல் சீவி, சிறிய சிறிய துண்டுகளாக வெட்டிக் கழுவவும்.
3 1/2 கப் தண்ணீரில் கிழங்கை போட்டு நன்றாக அவிய விடவும்
தண்ணீர் பாதியாக வற்றியதும், பாலை விடவும்.
பால் கொதித்ததும் சீனியைசேர்த்து , தேவையான அளவு உப்பையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஓரளவு இறுகியவுடன் இறக்கி மசிக்கவும்.. அத்துடன் சுவையான இராசவள்ளிக் கிழங்கு கூழ் ரெடி.....
சூட்டுடன் பரிமாறவும். மிகவும் சுவையாக இருக்கும்.
No comments