விடுதலை.. மற்றும் தனுஷின் 'D43' படங்களின் ஆடியோ உரிமம் பற்றிய தகவல்கள்

 விஜய் சேதுபதி
நடிக்கும் படம் விடுதலை. வெற்றிமாறன் இயக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில நாட்களுக்கு முன்பு வெளியானது.


ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்த படத்தை ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட்டின் சார்பாக எல்ரெட் குமார் தயாரிக்கிறார். ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவை கையாளுகிறார். ஈரோட்டின் சத்தியமங்கலம் காட்டுப்பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக வெற்றிமாறனின் இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.  

இந்நிலையில் இந்த படத்தின் ஆடியோ உரிமத்தை சோனி மியூசிக் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரியவந்துள்ளன. 

இதேபோல் தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கும் படம்  D43. இந்த படத்தின் ஆடியோ உரிமத்தை பிரபல லஹரி மியூசிக் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரியவந்துள்ளன. இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

No comments

Theme images by sandsun. Powered by Blogger.